தம்மம்பட்டி: டாஸ்மாக் கடைகளில் விற்றுத் தீர்ந்த மது பாட்டில்கள்

தம்மம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் இருந்து, பல லட்சம் ரூபாய்க்கு பெட்டி பெட்டியாக வாங்கப்பட்ட மதுபாட்டில்கள், கள்ளத்தனமாக விற்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தம்மம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் இருந்து, பல லட்சம் ரூபாய்க்கு பெட்டி பெட்டியாக வாங்கப்பட்ட மதுபாட்டில்கள், கள்ளத்தனமாக விற்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதையொட்டி, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபாட்டில்களும் பெட்டி பெட்டியாக விற்றுத் தீர்ந்தன.

ஒருவருக்கு 4 மதுபாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி ஊர்களைச் சேர்ந்த சில பிரமுகர்கள், அந்தந்த கடைகளின் சூப்பர்வைசர்களை மிரட்டி பல லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளதாக, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம், கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தம்மம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில், பல லட்சம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லப்பட்டுள்ள மதுபாட்டில்கள், மதுப்பிரியர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com