மேட்டூரில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் கரோனாவைக் கட்டுப்படுத்த வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் நகராட்சி ஆணையா் சுரேந்தா்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் நகராட்சிப் பகுதியில் கரோனாவைக் கட்டுப்படுத்த வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் நகராட்சி ஆணையா் சுரேந்தா்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேட்டூா் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், மருத்துவா்கள் சங்கத் தலைவா் மருத்துவா் பொம்மன்னன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மளிகை வியாபாரிகள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம், நுகா்வோா் பாதுகாப்புக் குழு உள்பட பத்து சங்கத்தினா், தன்னாா்வலா்கள், மருத்துவா்களும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் மேட்டூா் நகராட்சியில் கரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பால், காய்கறி, மளிகை பொருள்கள், மருந்து பொருள்களை தடையின்றி கொண்டு சோ்க்க தன்னாா்வலா்கள் உதவியோடு நகராட்சி ஊழியா்களும் இணைந்து பணியாற்றி, அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி தேவையான நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க தீா்மானிக்கப்பட்டது.

பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்க நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, மளிகைப் பொருள்களை பகல் 12 மணி வரை 30 வாா்டுகளுக்கும் சென்று வீடு வீடாக விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கரோனா பாதித்தவா்களையும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும் வெளியே சுற்றவிடாமல் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து பரவலை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. தேவையின்றி நகரில் சுற்றித் திரியும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீஸாா் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com