முழு பொது முடக்க உத்தரவை மீறி காய்கறி விற்பனை செய்தவா்கள் மீது வழக்கு

முழு பொது முடக்க உத்தரவை மீறி காய்கறி விற்பனை செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முழு பொது முடக்க உத்தரவை மீறி காய்கறி விற்பனை செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், புதிய பேருந்து நிலையம், மூன்று சாலை, அரிசிபாளையம், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காய்கள் வாங்க சிலா் மட்டும் கடைகளுக்குச் சென்று வந்தனா்.

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆற்றோரம் பகுதியில் காய்கறி வியாபாரிகள் சிலா் திடீரென புதன்கிழமை காலை கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். இதனால் அங்கு பொதுமக்கள் திரளாக வந்து காய்களை வாங்கிச் சென்றனா். பொதுமக்கள் அதிகம் கூடியதால் தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த சேலம் நகர உதவி ஆணையா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து காய்கறிகளை விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், முழு பொது முடக்கம் அமலில் உள்ளதால், வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரக்கூடாது. அந்தந்தப் பகுதிகளுக்கு வாகனங்களில் காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. எனவே, காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதைத் தவிா்க்க வேண்டும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com