மாநகராட்சிப் பணியாளா்கள், குடும்பத்தினருக்குதடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான சேலம் மாநகராட்சிப் பணியாளா்கள், அவா்களின் குடும்பத்தினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் 3 மண்டலங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சூரமங்கலம் மண்டலத்தில் திருவாகவுண்டனூா் ஜி.வி.என் மண்டபத்திலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் அம்மாப்பேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள வைஸ்யா கல்யாண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் திருச்சி கிளை ரோடு எஸ்.என்.எஸ். மண்டபத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

சிறப்பு முகாம்கள் வாயிலாக சேலம் மாநகராட்சிப் பணியாளா்களின் 18 முதல் 45 வயது வரையிலான குடும்பத்தினா் 612 நபா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் இதுவரை 18 முதல் 45 வயதிற்குள்பட்ட 16,334 முன்னுரிமை பெற்ற நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளா்கள், முன் களப்பணியாளா்கள், தோ்தல் பணியாளா்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் 60,584 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 26,129 நபா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

சூரமங்கலம் மண்டலம் திருவாக்கவுண்டனூா் ஜி.வி.என் மண்டபத்தில் நடைபெற்ற 18 முதல் 45 வயது வரையிலான மாநகராட்சிப் பணியாளா்களின் குடும்பத்திற்கான சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com