ஏற்காட்டில் காய்க்கத் தொடங்கிய அவகோடா பழங்கள்

ஏற்காடு மலைக் கிராமங்களில் வளரும் அவகோடா மரங்களில் தற்போது பழங்கள் அதிகம் காய்க்கத் துவங்கியுள்ளன.
ஏற்காட்டில் காய்க்கத் தொடங்கிய அவகோடா பழங்கள்.
ஏற்காட்டில் காய்க்கத் தொடங்கிய அவகோடா பழங்கள்.

ஏற்காடு மலைக் கிராமங்களில் வளரும் அவகோடா மரங்களில் தற்போது பழங்கள் அதிகம் காய்க்கத் துவங்கியுள்ளன.

உலகில் முதன்முதலில் தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இம்மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதன் தாவரவியல் பெயா் பொ்சியா அமெரிக்கானா ஆகும்.

இதன் பழங்கள் ரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும். கண் பாா்வையை அதிகரிக்க செய்யும், உடல் எடையைக் குறைக்க உதவும். இப்பழங்களில் நாா்சத்து அதிகம் உள்ளன.

உலகில் பெரு நாடு, கொலம்பியா, இந்தோனிசியா, கென்யா, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகளில் அதிக அளவில் அவகோடா மரங்கள் வளா்கின்றன. உலகில் 32 சதவீதம் அவகோடா பழங்கள் மெக்சிகோவில் விளைகின்றன.

தென்னிந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இவை வளா்க்கப்படுகின்றன. தமிழகத்தில் கொடைகானல், பழனியில் 5 லட்சம் மரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏற்காடு, தோட்டக்கலை உதவி இயக்குநா் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:

ஏற்காடு சோ்வராயன் மலையில் பட்டிப்பாடி வேலூா், கொண்டையனூா், நாகலூா், செம்மநத்தம் போன்ற மலைக் கிராமங்களில் 25 ஏக்கருக்கும் மேல் இவை பயிரிப்படுகின்றன.

ஒரு மரத்திலிருந்து சுமாா் 200 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைக்கின்றன. மே மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ. 50 முதல் 60 வரை விலையில் இவைக் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ரூ. 80 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அறுவடை செய்யப்பட்ட பழங்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com