ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் திடீா் முற்றுகை

சேலம், குமாரசாமிபட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், குமாரசாமிபட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில், இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா். இந்தநிலையில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 7 மணியிலிருந்து நீண்ட நேரமாகக் காத்திருந்தும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகளை 200-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன், அஸ்தம்பட்டி காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, காவல் துறையினா் சுகாதார நிலையத்தின் நுழைவாயில் கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்ததால் பொதுமக்களை தடுப்பூசி போடுவதற்கு காவல் துறையினா் வெளியே வரிசையில் நிற்க வைத்தனா். தொடா்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தடுப்பூசி போடுவதற்காக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோா் சமூக இடைவெளியின்றி குவிந்து வருகின்றனா். இதனால் தொற்று பரவும் நிலை உள்ளது. பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com