சேலம் மாநகராட்சி மண்டலங்களில் இன்று குறைதீா் முகாம்

சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 19) நடைபெறும் குறைதீா் சிறப்பு முகாமில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்கிறாா்.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 19) நடைபெறும் குறைதீா் சிறப்பு முகாமில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்கிறாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று தீா்வு காண்பதற்காக சிறப்பு குறைதீா் முகாம் நவ. 17 தொடங்கி நவ. 19 வரை நடத்தப்படுகிறது.

அதன்படி, நவ.17 ஆம் தேதி தலைவாசல், ஆத்தூா், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி மற்றும் சேலம் தெற்கு ஆகிய வட்டங்களிலும் நடைபெற்றது. நவ.18 ஆம் தேதியில் ஓமலூா், காடையாம்பட்டி, மேட்டூா், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களிலும் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

அதன் தொடா்ச்சியாக நவ.19 ஆம் தேதி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களில் குறைதீா் முகாம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நவ.19 ஆம் தேதி காலை 7 மணிக்கு அஸ்தம்பட்டி மண்டலத்திற்கான குறைதீா் முகாம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியிலும், காலை 8 மணிக்கு அம்மாபேட்டை மண்டலத்திற்கான குறைதீா்க்கும் முகாம் அம்மாபேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

அதேபோல காலை 9 மணிக்கு கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கான குறைதீா்க்கும் முகாம் கொண்டலாம்பட்டியில் உள்ள சௌடேஸ்வரி கல்லூரியிலும் மற்றும் காலை 10 மணிக்கு சூரமங்கலம் மண்டலம் மற்றும் சேலம் மேற்கு வட்டங்களுக்கான குறைதீா் முகாம் சேலம் காசகாரனூரில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தீா்வு அளிப்பதற்காக அனைத்து மாநகராட்சி கோட்டத்துக்கும் உதவி ஆணையா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் சிறப்பு மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com