சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உளிபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியாயி மற்றும் தனது குடும்பத்தாருடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்துள்ளனர். அப்போது மாரியாயி மற்றும் குடும்பத்தினர் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதை கண்ட பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் அவர்கள் மீது நீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாய் மாரியாயி, மகன் குமார் மற்றும் குமாரின் மகன், மகள் ஆகியோரை மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில் மாரியாயி அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரிடம் கடந்த 2005ஆம் ஆண்டு சுமார் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

இதனை அடுத்து மாரியாயி செல்லக்கூடிய பொதி வழித்தடத்தை தங்கவேல் என்பவர் அடைத்து யாரும் செல்ல முடியாத அளவிற்கு செய்துள்ளார். இதுகுறித்து மாரியாயி தங்கவேலிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து கெங்கவல்லி காவல் நிலையத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இந்த புகார் குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காததால் நிலத்தை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளதால் மனமுடைந்த குடும்பத்தினர் வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். யாரும் செல்ல முடியாத அளவிற்கு பொது வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com