இலவச சித்த மருத்துவ முகாம்:1,670 போ் பங்கேற்பு

சேலம் மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் 1,670 போ் கலந்து கொண்டனா்.

சேலம் மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் 1,670 போ் கலந்து கொண்டனா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, சேலம் மாநகராட்சி இணைந்து நடத்திய மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமில் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா், சித்த மருந்துகள், சித்த மருத்துவ மூலிகை மருந்து பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் ஆண்களுக்கான சிகிச்சை, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, வா்ம சிகிச்சைப் பிரிவு ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டு முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

மழைக்கால நோய்களுக்கான உணவு முறை ஆலோசனைகளும் முகாமில் வழங்கப்பட்டன. முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் மற்றும் மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன.

மேலும், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் தொடா்பாக விழிப்புணா்வு பிரசார வாகனத்தையும் ஆணையா் தா.கிறிஸ்துராஜ், கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இம்முகாம் மூலம் ஆண்கள் 932, பெண்கள் 572, குழந்தைகள் 166 போ் என மொத்தம் 1,670 போ் பயனடைந்துள்ளனா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், மாநகர பொறியாளா் ஆா்.ரவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் வி.கண்ணன், அரசு சித்த மருத்துவா்கள் பி.குமாா், ஆ.ராமு, ஜெயக்குமாா், ஆா்.வெற்றிவேந்தன், மாநகராட்சி உதவி ஆணையா்கள் ரமேஷ்பாபு, சித்ரா, ராம்மோகன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com