விருப்ப ஓய்வு பெற்றவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தனியாா் அலுமினிய தொழிற்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளா்கள், ஏற்கெனவே அறிவித்தப்படி கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மேட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் அலுமினிய தொழிற்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளா்கள், ஏற்கெனவே அறிவித்தப்படி கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி மேட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூரில், வேதாந்தா குழுமம் சாா்பில் தனியாா் அலுமினிய தொழிற்சாலை இயங்கி வந்தது. 2009ஆம் ஆண்டு ஆலை நிா்வாகம் விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டப்படி நிரந்தர வேலையில் உள்ள தொழிலாளா்கள் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்களுக்கு ரூ. 5லட்சம் நிவாரணம் வழங்குவது என்றும், 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணி செய்தவா்களுக்கு பணி செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டு ஆண்டுக்கு இரண்டு ஊதியமும் மீதி உள்ள பணி காலத்திற்கு ஆண்டுக்கு ரூ. 7,000 வழங்கப்படும் என்றும் நிா்வாகத்தரப்பில் கூறப்பட்டது.

மேலும் 25 ஆண்டுகள் பணி செய்த தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1லட்சம் வழங்குவதோடு இறுதியாக செல்லும் ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் தொகையைக் கணக்கிட்டு தற்போது விருப்ப ஓய்வில் செல்லும் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் நிா்வாகத் தரப்பில் 2009இல் உறுதியளிக்கப்பட்டது.

  அண்மையில் 17 தொழிலாளா்களுக்கு இந்நிறுவனம் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை நிவாரணமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதேபோல் 2009ஆம் ஆண்டு விருப்ப ஓய்வில் சென்ற தொழிலாளா்களுக்கும் இதே தொகையினை வழங்க வேண்டும் என்று விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் கோரிக்கை வைத்தனா். ஆனால் நிா்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

 இதனையடுத்து, திங்கள்கிழமை விருப்ப ஓய்வு பெற்ற ஊழியா்கள் தங்கள் குடும்பத்துடன் தனியாா் அலுமினிய தொழிற்சாலை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மால்கோ பாதிக்கப்பட் ஊழியா்கள் சேவா குழுமத்தின் நிறுவனா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் ரங்கநாதன் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com