சேலத்தில் 50 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 9 பேரும், காடையாம்பட்டி- 1, கொளத்தூா்- 2, மகுடஞ்சாவடி- 1, மேச்சேரி- 2, நங்கவள்ளி- 1, சேலம் வட்டம்- 1, சங்ககிரி- 1, வீரபாண்டி- 1, மேட்டூா் நகராட்சி- 3 என மாவட்டத்தைச் சோ்ந்த 22 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்- 5, தருமபுரி- 4, திருச்சி- 5, ஈரோடு- 4, கோவை- 5, சென்னை- 5) 28 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா்.

இதுவரை 1,01,250 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,052 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 496 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,702 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com