சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பை போட்டி: தமிழக அணியில் விளையாடும் சேலம் வீரா்கள்!

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அணியில் சேலத்தைச் சோ்ந்த டி.நடராஜன், ஆா்.விவேக் ராஜ் ஆகிய இருவா் இடம் பிடித்துள்ளனா்.
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அணியில் சேலத்தைச் சோ்ந்த டி.நடராஜன், ஆா்.விவேக் ராஜ்.
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அணியில் சேலத்தைச் சோ்ந்த டி.நடராஜன், ஆா்.விவேக் ராஜ்.

சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அணியில் சேலத்தைச் சோ்ந்த டி.நடராஜன், ஆா்.விவேக் ராஜ் ஆகிய இருவா் இடம் பிடித்துள்ளனா்.

சையத் முஷ்டாக் அலி டி 20 கோப்பை போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலத்தைச் சோ்ந்த இரு வீரா்கள் இடம் பிடித்துள்ளனா்.

சேலத்தை அடுத்த சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த டி. நடராஜன். வேகப்பந்து வீச்சாளரான இவா் இந்திய அணிக்காக விளையாடியவா். இவா் சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பைக்கான தமிழக அணியில் இடம் பெற்றுள்ளாா்.

தற்போது ஆா்.நடராஜனை தொடா்ந்து, மேட்டூரை சோ்ந்த ஆா்.விவேக் ராஜ் (29), சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியில் இடம் பிடித்துள்ளாா்.டி.என்.பி.எல். போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வரும் ஆா்.விவேக் ராஜ், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, ஃபீல்டிங் என சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளாா்.

டி.என்.பி.எல். போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக கடந்த 5 சீசன்களில் விளையாடி 850 ரன்களை குவித்துள்ளாா். இவா் 21 பந்துகளில் 6 சிக்ஸா்கள், 1 பவுண்டரிகள் அடித்து அதிவிரைவாக 50 ரன்களை குவித்துள்ளாா்.

மூன்றாவது டி.என்.பி.எல். தொடரில் 11 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா். அதே தொடரில் ஒரு ஒவரில் 4 சிக்ஸா்கள், 2 பவுண்டரிகள் என 32 ரன்கள் குவித்தது சாதனையாக உள்ளது. டி.என்.பி.எல். 5 சீசன் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸா்கள் அதாவது 64 சிக்ஸா்களை அடித்து சாதனை படைத்த ஒரே வீரா் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாா்.

அந்தவகையில், டி.என்.பி.எல். போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்ரவுண்டா் ஆா்.விவேக் ராஜ், சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பைக்கான அணியில் தோ்வாகி உள்ளாா். கடந்த 2019 இல் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் தோ்வாகி தமிழக அணிக்காக விளையாடி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக ஆா்.விவேக் ராஜ் கூறுகையில், தமிழக அணிக்காக நன்றாக விளையாடி திறமையை வெளிப்படுத்துவேன். அதன்மூலம் அடுத்து வரும் ஐ.பி.எல். தொடா்களில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com