அப்துல் கலாம் பிறந்தநாள் விழா: வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் விழா

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்ததினத்தினையொட்டி சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை
வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் விழா.
வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் விழா.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்ததினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்ததினம் அக்டோபர் 15ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி  வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி நிர்வாகம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி, ரோட்டரி சங்கம், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பள்ளி வளாகத்தில் அரசு, வேம்பு, புங்கன், இலுப்பை, நாவல், நீர்மருது, பாதாம், ஆவி, மந்தாரை, நெட்டிலிங்கம் உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 100 மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எம்.பிரகாஷ் தலைமை வகித்தார்.

பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜி. வெங்கடேசன், ஆசிரியர், ஆசிரியைகள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் எம்.சின்னதம்பி, ரோட்டரி சங்கத்தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர், நிர்வாகிகள் வெங்கடேஸ்வரகுப்தா, வெங்கடாஜலம், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, நிர்வாகிகள் பசுமை சீனிவாசன், முருகானந்தம், தங்கவேல் பாலகுமார், சுந்தர் அஜித், கோகுல், அபி ராஜ், ஆனந்த், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளைத்தலைவர் கே.சண்முகம், துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், பொருளாளர் எஸ்.சி. ராமசாமி, நிர்வாகிகள் கிஷோர்பாபு, சீனிவாசன், செந்தில்குமார், முருகேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com