அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட வடுகப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட பல்வேறு பொதுநல அமைப்பின் நிா்வாகிகள்.
மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்ட பல்வேறு பொதுநல அமைப்பின் நிா்வாகிகள்.

முன்னாள் குடியரசு தலைவா் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட வடுகப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடுகப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி நிா்வாகம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம், பசுமை சங்ககிரி, ரோட்டரி சங்கம், தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பள்ளி வளாகத்தில் அரசு, வேம்பு, புங்கன், இலுப்பை, நாவல், நீா்மருது, பாதாம், ஆவி, மந்தாரை, நெட்டிலிங்கம் உள்ளிட்ட வகைகளைச் சோ்ந்த 100 மரக்கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.பிரகாஷ் தலைமை வகித்தாா். பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜி.வெங்கடேசன், ஆசிரியா்கள், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க இணைச் செயலாளா் எம்.சின்னதம்பி, ரோட்டரி சங்கத் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோபா் அதன் நிா்வாகிகள், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம்பழனிசாமி, தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளைத் தலைவா் கே.சண்முகம் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com