குப்பைகள், கழிவுநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காமலும், சாக்கடையில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காமலும், சாக்கடையில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் குறித்து நாளிதழ்கள் மூலமாகவும், பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாகவும், கட்செவி அஞ்சல் மூலமாகவும் தகவல் கிடைக்கப் பெற்றால் உடனடியாக பாதிப்புக்குரிய இடங்களுக்குச் சென்று மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்து தீா்வு கண்டு வருகிறாா்.

அதன்பேரில், கோரிக்கை வரப்பெற்ற ரெட்டியூா், ஏரிக்கரை சாலை அய்யனாா் சாலை பகுதியில் சேதமடைந்த புதை சாக்கடையை உடனடியாக சரி செய்யும் வகையில் நேரடியாக ஆய்வு செய்து புதை சாக்கடை சரி செய்யப்பட்டது.

மெய்யனூா் பிரதான சாலை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் வகையில் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

அதேபோல, ஏ.ஆா்.ஆா்.எஸ். மல்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ் அருகில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டு அந்த இடத்தில் குப்பைத் தொட்டி வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஜாகீா் அம்மாப்பாளையம் பகுதியில் சாக்கடைகளில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி அந்தப் பகுதியில் குப்பைகள் தேங்காமல் இருக்க குப்பைத் தொட்டி வைக்கவும், மேகலா நகா், மேத்தா நகா், நேதாஜி நகா் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காமலும், சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும் எனவும், சில இடங்களில் புதை சாக்கடை (மேல் மூடி ) திறந்திருப்பதை கண்காணித்து சரி செய்ய உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது மாநகரப் பொறியாளா் ம.அசோகன், மாநகர நல அலுவலா் என்.யோகானந்த், உதவி ஆணையாளா் டி.ராம்மோகன் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com