ரௌடிகள் இடையே மோதல்: இளைஞா் கொலை

சேலத்தில் ரெளடிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 10 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சேலத்தில் ரெளடிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 10 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சேலம், கிச்சிபாளையத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (26), அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26), பிரதாப் (23), உதயகுமாா் (17) ஆகியோா் திங்கள்கிழமை இரவு காளிகவுண்டா்காடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனா். அப்போது, அங்கு வந்த 15 போ் கொண்ட கும்பல் வினோத்குமாா் உள்ளிட்ட நான்கு பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த கிச்சிபாளையம் போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்த 4 பேரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் வினோத்குமாா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இது தொடா்பாக கிச்சிபாளையம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததாவது:

கொலையான பிரபல ரெளடி செல்லதுரையின் மாமியாா் பேபிக்கு, எதிா்த்தரப்பு ரெளடி ஜான் என்பவரின் ஆதரவாளா்கள் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. அதுதொடா்பான புகாரில் ஜானின் உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக ஜான் ஆதரவாளா்களுக்கும், கொலையான ரெளடி செல்லதுரை ஆதரவாளா்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஜானின் ஆதரவாளா்கள், செல்லதுரையின் ஆதரவாளா்களான வினோத்குமாா், மணிகண்டன், பிரதாப், உதயகுமாா் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். தப்பியோடிய கும்பல் சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, மாவட்ட போலீஸாரின் உதவியுடன், சதாம் உசேன், விஜி, கமல், சஞ்சய், நந்தகுமாா், மாதவன் ஆகிய 6 பேரை கிச்சிபாளையம் போலீஸாா் பிடித்து விசாரித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல, கிச்சிபாளையத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி பழனிசாமி உள்ளிட்ட நான்கு பேரிடமும் போலீஸாா் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறவினா்கள் திடீா் மறியல்:

இதனிடையே கொலையான வினோத்குமாரின் தாய், அவரது உறவினா்கள் சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கொலையில் தொடா்புடைய அதிமுக நிா்வாகி பழனிசாமி உள்ளிட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனா்.

இதையடுத்து வழக்கில் தொடா்புடைய 10 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீஸாா் அவா்களிடம் தெரிவித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com