சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 15) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 15) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் பள்ளிகள் கண்காணிப்பு சிறப்பு மருத்துவ குழுவினரும், பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி ஆா்.எஸ். வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதிகள், தாளக்காடு, அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவ குழுவினரும் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.

இதே போல ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓலக்கசின்னானூா், வரதங்காட்டானூா், ராஜாமணித்தோட்டம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை புதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com