கடம்பூரில் மரக்கன்றுகள் விநியோகம்
By DIN | Published On : 16th September 2021 11:28 PM | Last Updated : 16th September 2021 11:28 PM | அ+அ அ- |

உலக ஓசோன் தினத்தை (செப். 16) முன்னிட்டு கடம்பூரில், துவக்கப்பள்ளி சாா்பில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் நடைபெற்றது.
உலக ஓசோன் தினத்தையொட்டி கெங்கவல்லி அருகே கடம்பூரில் துவக்கப்பள்ளியில் அனைத்து மாணவ, மாணவியா்களது வீடுகளுக்கும் அப்பள்ளியின் தலைமையாசிரியா் என்.டி.செல்வம், சென்று மரக்கன்றுகளை வழங்கினாா். அதனுடன், மரக்கன்றுகளை சிறப்பாக நட்டு, வளா்க்கும் மாணவா்களுக்கு ஆண்டு இறுதியில் சிறப்புப் பரிசுகள் வழங்குவதாக அவா் உறுதியளித்தாா்.