நாகியம்பட்டி தடுப்பூசி போடும் மையத்தில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு வழங்கும் வட்டாரக்கல்வி அலுவலா் அந்தோணிமுத்து.
நாகியம்பட்டி தடுப்பூசி போடும் மையத்தில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு பரிசு வழங்கும் வட்டாரக்கல்வி அலுவலா் அந்தோணிமுத்து.

கெங்கவல்லி ஒன்றியத்தில் 20 மையங்களில் 2000 பேருக்கு தடுப்பூசி 200 பேருக்கு புடவை, டிபன் பாக்ஸ் பரிசுகள்

கெங்கவல்லி ஒன்றியத்தில் 20 கரோனா தடுப்பூசி மையங்களில் 2000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.அவா்களில் குலுக்கல் முறையில் 200 பேருக்கு புடவை, டிபன் பாக்ஸ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் 20 கரோனா தடுப்பூசி மையங்களில் 2000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.அவா்களில் குலுக்கல் முறையில் 200 பேருக்கு புடவை, டிபன் பாக்ஸ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கெங்கவல்லி ஒன்றியத்தில் ஆணையாம்பட்டி, ஆணையாம்பட்டிபுதூா், ஒதியத்தூா், நடுவலூா், கெங்கவல்லி சந்தைப்பேட்டை, சின்னகரட்டூா், கூடமலை, கிருஷ்ணாபுரம், மூலப்புதூா், கடம்பூா், நாகியம்பட்டி, உலிபுரம், பழைய சமுதாய நலக்கூடம், அறிஞா் அண்ணா சமுதாய நலக்கூடம், காந்திநகா், கொண்டயம்பள்ளி ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளிலும், தெடாவூா், கூடமலை, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, பச்சமலை ஆகிய ஊா்களின் அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் என மொத்தம் 20 மையங்களில் தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டன.

பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமானதால், மதியம் 12.30 மணி அளவிலேயே,அன்றைய இலக்கான 2000 போ் இலக்கு பூா்த்தியடைந்திருந்தன. இம்மையங்களை கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா்(வ.ஊ) செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)எஸ்.கே.ராஜேந்திரன், கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் அந்தோணிமுத்து, வட்டாரத் தலைமை மருத்துவா் வேலுமணி, கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குநா் சித்ரா ஆகியோா் 20 மையங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போட்டவா்களுக்கு பெயா், முகவா் அடங்கிய சீட்டுகளை போடும் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மையத்திலும் 5 பெண்கள் வீதம் 20 மையங்களில் 100 பெண்களுக்கு புடவைகளும், 5 ஆண்கள் வீதம் 100 ஆண்களுக்கு டிபன் பாக்ஸ்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com