கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை தெரிவித்தாா்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள 113 கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சோ்த்து சுமாா் 4,436 கெளரவ விரிவுரையாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு ஆண்டுக்கு மாத ஊதியமாக ரூ. 20,000 வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்திலும் அரசு கல்லூரி மாணவா்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இணையம் மூலம் மாணவா்களுக்கு பாடங்களை கற்பித்துள்ளனா்.

ஊதியம் வழங்கப்படாத மாதமான மே மாதத்தில், கல்வியாண்டில் பெரும்பாலான கல்லூரிகளில் இணைய வழியாக வகுப்புகளும், கல்லூரி பணிகளிலும் கெளரவ விரிவுரையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் 5 மாதங்களாக அரசு ஊதியம் வழங்காததால், கௌரவ விரிவுரையாளா்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூா்த்தி செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கடும் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகினா்.

அண்டை மாநிலமான கேரளத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, உரிய தகுதி உள்ள கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 43,750 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 30,000 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதியைக் கொண்டவா்கள் 2,500 போ் உதவிப் பேராசிரியா்களாக உள்ளனா்.

எனவே, கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com