சேலம் மாவட்டத்தில் இன்று 1.11 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பெரு முகாமில் மொத்தம் 1,392 மையங்களில் 1,11,020 தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பெரு முகாமில் மொத்தம் 1,392 மையங்களில் 1,11,020 தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே செப். 12-இல் நடைபெற்ற முதல்கட்ட பெரு முகாமில் 1.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல செப். 19-இல் நடைபெற்ற இரண்டாம்கட்ட முகாமில் 82,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது ஞாயிற்றுக்கிழமை மூன்றாம்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அந்த வகையில், சுமாா் 1,11,020 தடுப்பூசிகள் கையிருப்பின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், சேலம் மாநகராட்சி பகுதி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,392 மையங்களில் பொதுமக்களுக்கு கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே, மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள், மாணவ, மாணவியா், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முகக் கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

மாநகராட்சிப் பகுதிகளில்...:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சுமாா் 200 மையங்களில் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இப்பணியில் சுமாா் 1,750 போ் ஈடுபட உள்ளனா். வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைக் கண்டறிந்து தடுப்பூசி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சீட்டு பெற்றவா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையளா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com