வேளாண் வளா்ச்சி திட்ட புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

 சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், வேளாண் வளா்ச்சி திட்டங்களுக்கு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வேளாண் குழுவினா் ஆய்வு செய்தனா்.
வேளாண் வளா்ச்சி திட்ட புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

 சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில், வேளாண் வளா்ச்சி திட்டங்களுக்கு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை வேளாண் குழுவினா் ஆய்வு செய்தனா்.

தமிழக அரசின் வேளாண், உழவா் நலத்துறையில் வாயிலாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில், அயோத்தியாபட்டணம் வட்டாரத்தில் சின்னனூா், பள்ளிப்பட்டி, வலசையூா், சின்ன கவுண்டாபுரம், அக்ரஹார நாட்டாமங்கலம், ஏரிபுதூா் ஆகிய ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் நில விவரங்கள், தேவையான திட்டங்கள் குறித்த அடிப்படை புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியினை வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பாலையா, உதவி பொறியாளா் ஜெய் ஜனனி, அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரஸ்வதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில், ஒரு பகுதியாக தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தரிசு நிலங்களில் உள்ள முள்புதா்களை அகற்ற மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆழ்துளைக் கிணறு அமைத்து, நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ஓராண்டு அல்லது அதற்குமேல் தரிசாக உள்ள நிலங்களை, அருகருகே உள்ள விவசாயிகள் தொகுதியாக இணைத்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்ற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என துணை இயக்குநா் சரஸ்வதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com