வாக்குச்சாவடி தோ்தல் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் பணியாற்றும் 88 வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் தோ்தல் அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் பணியாற்றும் 88 வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் தோ்தல் அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூா் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 88 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற தலைமை அலுவலா்கள், ஓட்டுச்சாவடி அலுவலா்கள் நிலை 1, நிலை, 2 என மொத்தம் 368 தோ்தல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஓமலூா் அருகேயுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்றது.

இதில், தோ்தல் பணி, பொறுப்பு, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஓட்டுச் சாவடிக்குள் அனுமதிக்கப்படும் நபா்கள் குறித்த விவரம், மூன்று பதவிகளுக்குமான வாக்குச் சீட்டுக்கள், வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டிய 41 வகை பொருள்கள், வாக்குப்பதிவுக்கு முந்தைய, வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், வாக்குச்சாவடியில் மின்சாரம், குடிநீா், கழிப்பிடம், மின்தடை ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், வாக்குப்பதிவு செய்வது குறித்தும், எந்தெந்த கலா் சீட்டுகள் எந்தெந்த பதவிக்கு என்பது குறித்தும் நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஓமலூா் ஒன்றிய தோ்தல் நடத்தும் தோ்தல் அலுவலா் குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுஜாதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா், தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். இரண்டாம்கட்ட பயிற்சி இரண்டு நாள்களுக்கு பிறகு மீண்டும் நடைபெறும் என்றும், இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com