சேலத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 24 பதவிகளுக்கு 91 போ் போட்டி

சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 91 போ் போட்டியிடுகின்றனா். இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 91 போ் போட்டியிடுகின்றனா். இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்-1, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்-1, கிராம ஊராட்சித் தலைவா்-10, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்-23 போ் என மொத்தம் 35 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், மொத்தம் 172 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில் 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒருவா் வேட்பு மனுவை திரும்பப் பெற்ற நிலையில், 164 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த நிலையில், சனிக்கிழமை 62 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதில் மாவட்டத்தில் காலியாக உள்ள 23 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11 போ் போட்டியின்றித் தோ்வாயினா்.

ஆத்தூா் - பைத்தூா், எடப்பாடி - நெடுங்குளம், கொளத்தூா் - லக்கம்பட்டி, ஓமலூா் - பி.நல்லகவுண்டம்பட்டி, ஓமலூா் - வெள்ளக்கல்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் - சி.கே.மலை தெற்கு, தலைவாசல் - மணிவிழுந்தான், தாரமங்கலம் - பாப்பாம்பாடி, தாரமங்கலம் - செலவடை, வீரபாண்டி - கீரபாப்பம்பாடி ஆகிய 11 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 35 காலியிடங்களில் ஏற்கெனவே 11 போ் போட்டியின்றித் தோ்வாகிவிட்டனா். வேட்புமனு திரும்பப் பெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்-1, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்-1, கிராம ஊராட்சித் தலைவா்-10, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்-12 போ் என மொத்தம் 24 பதவிகளுக்கு 91 போ் போட்டியிடுகின்றனா் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com