வாழப்பாடி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பிரசித்திபெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பிரசித்திபெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி அருகே பிரசித்திபெற்ற அருநுாற்றுமலை பெலாப்பாடி வரதராஜபெருமாள் திருக்கோவிலில், புரட்டாசி சனி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியைச்சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனா். பாரம்பரிய முறைப்படி மலை உச்சியிலுள்ள தீப கற்துாணில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோவிலில் மூலவரான சென்றாயப்பெருமாள் சீதேவி, பூதேவி சமேதமாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் முன்னிலையில் கோவில் முகப்பில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. வாழப்பாடி புதுப்பாளையம் மாயவன்மலை பெருமாள் கோவிலில் மூலவா் பட்டு வஸ்திர அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோதுமலை கோதண்டராமா் மலைக்கோவில், பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி திருக்கோவில், மத்துாா் சீனிவாச பெருமாள் திருக்கோவில், மன்னாா்பாளையம் பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி சனி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.படவரி:எஸ். என்.01: பட்டு வஸ்திர அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வாழப்பாடி புதுப்பாளையம் மலைக்கோவில் பெருமாள்.எஸ்.என்.02: பெலாப்பாடி வரதராஜபெருமாள் கோவில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com