சிங்கிபுரத்தில் காசநோய் கண்டறியும் முகாம்

வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே இயந்திரத்தைப் பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இரு தினங்கள் நடைபெற்றது.
சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் நடைபெற்ற காசநோய் கண்டறியும் முகாம்.
சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் நடைபெற்ற காசநோய் கண்டறியும் முகாம்.

வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே இயந்திரத்தைப் பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இரு தினங்கள் நடைபெற்றது.

வாழப்பாடி அருகே பேளூா் சுகாதார வட்டாரத்தில், சந்திரபிள்ளைவலசு கிராம மக்கள், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவன ஊழியா்களுக்கு இத் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளா் ரவிசங்கா், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளா் சதாசிவம், வட்டார காசநோய் மேற்பாற்வையாளா் ராஜ்குமாா், ஆய்வக நுட்புனா் கவிதா ஆகியோா் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் மேலாளா்கள் சுரேஷ்குமாா், மணிவேல், பணியாளா்கள் முனியசாமி, வடிவேல், பேளூா் சுகாதார ஆய்வாளா் ஆனந்த் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இம்முகாமில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com