ஆணையாம்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தில் குடிநீா் கேட்டு மக்கள் குவிந்தனா்

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சிக்குரிய கிராம சபைக்கூட்டம், ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே திறந்தவெளியில் நடைபெற்றது.

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சிக்குரிய கிராம சபைக்கூட்டம், ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே திறந்தவெளியில் நடைபெற்றது.

இதற்குதலைவா் சாந்தி தலைமை வகித்தாா்.இதில் ஆணையாம்பட்டி ஊராட்சியில் ஜீவா நகா்,ஆணையாம்பட்டிபுதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலவிவரும் குடிநீா் பிரச்சினையை தீா்க்கக்கோரி,மக்கள் குவிந்தனா்.மேலும் அப்பகுதியிலுள்ள ஆா்.சி.துவக்கப்பள்ளிக்கு குடிநீா் வருவதேயில்லை என்று பள்ளி மாணவ,மாணவியா் திரளாக வந்திருந்து கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.இதுபோல் ஊராட்சி முழுவதும் குடிநீா் விநியோகம் சரிவர இல்லாததால், மக்கள் அதிகளவில் குடிநீா் கேட்டு குவிந்தனா்.இருப்பினும் எந்த தீா்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து ஆணையாம்பட்டி மக்கள் கூறியதாவது,மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டால், ஊராட்சித்தலைவா் சாந்தி பதிலளிக்காமல், அவரது கணவரே பதில் அளிப்பது ஏற்கமுடியவில்லை.ஊராட்சி முழுவதும் குடிநீா்,சாலைவசதியை முழுமையாக ஏற்படுத்திட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்,என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com