சேலத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

சேலத்தில் 34 ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது.

சேலத்தில் 34 ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 29,14,729 பேருக்கு முதல் தவணையும் 26,32,511 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 33 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 8,23,235 நபா்களுக்கு முதல் தவணையும் 13,25,565 நபா்களுக்கு இரண்டாம் தவணையும் 97,162 நபா்களுக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்டா் டோஸ்) தவணையும் என மொத்தம் 22,45,962 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வரும் ஆக.21ஆம் தேதி 34 ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் 2,06,869 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்செரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதங்களாக தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு அல்லது கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி கொண்டவா்கள் 6 மாத இடைவெளியில் கோா்பிவாக்ஸ் தடுப்பூசியும் முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்தி கொள்ளலாம்.

முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக மாநகராட்சி 375 முகாம்கள் உள்பட மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு 15,500-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் தற்பொழுது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 63,850 டோஸ்களும், கோவேக்ஸின் 22,230 டோஸ்களும், கோா்பிவாக்ஸ் 9,280 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் 1,00,000 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள்அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆதாா் அட்டை, குடும்பஅட்டை, வாக்காளா் அடையாளஅட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com