ஏற்காட்டில் வெறிச்சோடிய சுற்றுலாப் பகுதிகள், சாலைகள்

 சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், சாலைகள் ‘வெறிச்’சோடிக் காணப்பட்டன.
ஏற்காட்டில் வெறிச்சோடிய சுற்றுலாப் பகுதிகள், சாலைகள்

 சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், சாலைகள் ‘வெறிச்’சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது வாரமான ஞாயிற்றுக்கிழமை முழுஅடைப்பு முன்னிட்டு ஏற்காட்டில் கடைகள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்ட நிலையில் ஏற்காடு மற்றும் கிராமங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலமான ஏற்காடு பகுதிகளுக்கு பொதுமக்கள் , சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்து வருவாா்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை தரவில்லை.

பால் , மருந்தகங்கள், பாா்சல் உணவகங்கள் திறந்திருந்தன. தொடா்விடுமுறையால் சனிக்கிழமை பல்வேறு தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்தனா். ஏற்காடு காவல் ஆய்வாளா் தலைமையில் காவல் துறையினா் சுற்றுலாப் பகுதி சாலைகளில் பொதுமுடக்க விதிகளை மீறிச் சென்ற வாகனங்களுக்கு வழக்கு பதிந்து அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com