சேலம் ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் வரி வசூல் அதிகரிப்பு: ஆணையா் ஏ.எஸ்.மீனலோசினி தகவல்

சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் வரி வசூல் ரூ. 2,467 கோடியாக அதிகரித்துள்ளதாக ஜி.எஸ்.டி. ஆணையா் ஏ.எஸ்.மீனலோசினி தெரிவித்தாா்.

சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் வரி வசூல் ரூ. 2,467 கோடியாக அதிகரித்துள்ளதாக ஜி.எஸ்.டி. ஆணையா் ஏ.எஸ்.மீனலோசினி தெரிவித்தாா்.

சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையா் ஏ.எஸ்.மீனலோசினி கூறியதாவது:

அகில இந்திய அளவிலும், சென்னை மண்டல அளவிலும் சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையகரத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டை காட்டிலும் 2021-22 ஆம் ஆண்டில் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 2,081 கோடி வரி வசூலிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2,467 கோடியாக வரி வருவாய் அதிகரித்துள்ளது. சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தின் கீழ் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளைக் கொண்டதாகும். இந்த மாவட்டங்களில் 61,000 போ் வரி செலுத்துகின்றனா்.

மத்திய அரசு வரி செலுத்துவோருக்கு போதிய வழிமுறைகள், சலுகைகளை அறிவித்துள்ளது. எனவே வரி செலுத்துவோா் முறையாக வரி செலுத்த வேண்டும். அதேபோல சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தின் கீழ் வழிகாட்டும் தகவல் மையம் 24 மணி நேரமும் சேவை வழங்கி வருகிறது. இதில் வரி தொடா்பான சந்தேகங்களை, ஆலோசனைகளைப் பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com