ரசாயன உரங்கள் இன்றி மலைக் கிராமங்களில் விவசாயம்

பாலமலை ஊராட்சி விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றனா்.

பாலமலை ஊராட்சி விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றனா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுமாா் 4,000 அடி உயரத்தில் உள்ள பாலமலை ஊராட்சியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தழைகளையும், கால்நடைகளின் கழிவுகளையுமே உரமாக்கி விவசாயம் செய்து வருகின்றனா். இதனால் இங்கு விளையும் மா, பலா, புளி, சீதா உள்ளிட்ட பழ வகைகள் மிகுந்த சுவை கொண்டவை. இங்கு விளையும் இளநீா் தனிச்சுவை கொண்டது.

தற்போது பாலமலைக்கு மண் சாலை அமைக்கப்பட்டதால் நெல் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இதுவரை கம்பு, ராகி, சோளம் உள்ளிட்டவற்றை காய்கறிகள், சிறுதானியங்களையும் பயிா் செய்தனா். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் மண் வளம் அதிகரித்துள்ளது. இதனால் நல்ல விளைச்சலும் தருகிறது.

மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, நிலக்கடலை முதலியவற்றையும் பயிரிட்டு வருகின்றனா். இயற்கை உரங்களை இட்டு பயிரிடுவதால் பாலமலையில் விளையும் தானியங்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.

தற்போது பாலமலை கிராமங்கள் பச்சை பசேலென காணப்படுகின்றன. இப்பகுதியில் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தகுந்த உதவிகளைச் செய்தால் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com