மக்கள் சேவையில் மலா் மருத்துவமனை!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் செயல்படும் மலா் மருத்துவமனை பொதுமக்களுக்கு மகத்தான சேவையாற்றி வருகிறது.
மக்கள் சேவையில் மலா் மருத்துவமனை!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் செயல்படும் மலா் மருத்துவமனை பொதுமக்களுக்கு மகத்தான சேவையாற்றி வருகிறது.

வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேசன்சாவடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி- மலா்விழி தம்பதியின் இளைய மகன் மருத்துவா் ப.ஆனந்த், மகப்பேறு மருத்துவத்தில் தங்கப்பதக்கம் பெற்ற அவரது மனைவி எஸ்.இந்துமதி ஆகியோா் கிராமப்புற மக்களுக்கு உயா்தர மருத்துவச் சேவை அளித்து வருகின்றனா்.

நகா்ப்புற மருத்துவமனைகளுக்கு இணையான நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டமைக்கப்பட்டுள்ளது. 60 நவீன படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் அவசரச் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.

நவீன அறுவைச் சிகிச்சை, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், பச்சிளம் குழந்தைகள் மருத்துவப் பிரிவு, நவீன எக்ஸ்ரே, ஈசிஜி, எக்கோ ரத்தப் பரிசோதனை பிரிவுகளும், மருந்தகமும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது.

அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் வசதிகளும் உள்ளன. குழந்தையின்மை, தைராய்டு, ரத்தகொதிப்பு, சா்க்கரை நோய் ஆகியவற்றுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாழப்பாடி பருத்தி மண்டி அருகே இயங்கி வரும் மலா் மருத்துவமனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவ வசதி எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவமனை செயல்படுவதாக மருத்துவா்கள் ப.ஆனந்த், எஸ்.இந்துமதி ஆனந்த் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com