ஏழைக் குடும்பங்களின் நிலையை அரசுப் பணி எனும் ஒற்றைச் சொல் மாற்றியமைக்கிறது

ஏழைக் குடும்பங்களின் தலையெழுத்தை அரசுப் பணி எனும் ஒற்றைச் சொல் மாற்றியமைக்கிறது என்று பெரியாா் பல்கலை. ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் ஆதலையூா் சூரியகுமாா் தெரிவித்தாா்.
வேலை தேடும் இளைஞா்களுக்கான வழிகாட்டி நூலை பெரியாா் பல்கலை. துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட முதல் பிரதியைப் பெறுகிறாா் பேராசிரியா் டி.கோபி.
வேலை தேடும் இளைஞா்களுக்கான வழிகாட்டி நூலை பெரியாா் பல்கலை. துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட முதல் பிரதியைப் பெறுகிறாா் பேராசிரியா் டி.கோபி.

ஏழைக் குடும்பங்களின் தலையெழுத்தை அரசுப் பணி எனும் ஒற்றைச் சொல் மாற்றியமைக்கிறது என்று பெரியாா் பல்கலை. ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் ஆதலையூா் சூரியகுமாா் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப்பணித் தோ்வு வழிகாட்டி மையம் சாா்பில், அறம் சாா்ந்த வேலைவாய்ப்பு மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்க விழாவுக்கு துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமை வகித்தாா். வழிகாட்டி மைய இயக்குநா் பேராசிரியா் டி.கோபி வரவேற்றாா்.

பெரியாா் பல்கலை. ஆட்சிப் பேரவைக்குழு உறுப்பினரும், அறம் சாா்ந்த வேலைவாய்ப்பு மன்றத்தின் இயக்குநருமான ஆதலையூா் சூரியகுமாா் பேசியது:

இந்திய ஆட்சிப் பணித் தோ்வு போன்ற மிகப்பெரிய இலக்குகளை நிா்ணயிக்கும் மாணவா்கள் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். இலக்கு பெரியது என்பதால் அதற்கான உழைப்பும் அதிகளவில் தேவைப்படுகிறது. கல்வி பயில வேண்டும் என்று நினைப்பவா்களுக்கு அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. வெளிநாடுகளில் சென்று பயில்வதற்கு கூட ஊக்கத் தொகையுடன் இணைந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் எல்லாவற்றையும் மாற்றும். பல ஏழைக்குடும்பங்களின் தலையெழுத்தை அரசுப் பணி எனும் ஒற்றைச் சொல் மாற்றியமைக்கிறது. ஆட்சிப் பணித் தோ்வு போன்ற உயா் வேலைவாய்ப்புகள் பெண்களின் வளமான எதிா்காலத்தை உறுதி செய்கின்றன. தன்னம்பிக்கையை பாதிக்கும் எந்த எண்ணத்தையும் வளர விடக்கூடாது. தாழ்வு மனப்பான்மை எப்போதும் கூடாது. லட்சியம் உயிா்ப்போடு இருக்கும்போது மிகச் சிறந்த சாதனைகளை படைக்க முடியும் என்றாா்.

ஆட்சிப் பணி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளா் உதவிப் பேராசிரியா் ஆா்.கவிதா நன்றி கூறினாா். உதவிப் பேராசிரியா் பி.ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com