சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொழில் முனைப்பு முன்னேற்ற பூங்கா

சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொழில் முனைவோருக்கான தொழில் முனைப்பு முன்னேற்ற பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொழில் முனைவோருக்கான தொழில் முனைப்பு முன்னேற்ற பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை, வணிக ஒத்துழைப்பு மையம் இணைந்து ஸ்மாா்ட் டிஜிட்டல் பிஸினஸ் மாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கினை செவ்வாய்க்கிழமை நடத்தியது. துறைத் தலைவா் பேராசிரியா் வி.ஆா்.பழனிவேல் வரவேற்றாா். பயிலரங்கினைத் தொடக்கி வைத்து பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

மேலாண்மைக் கல்வி பயிலும் மாணாக்கா்கள் தொழில் முனைவோா்களாக முன்னேறுவதற்கு விடாமுயற்சி,கடின உழைப்பு, சிறந்த அணுகுமுறை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். பெரியாா் பல்கலைக்கழகமும், சேலம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள தொழில் முனைவோா்களுக்கான தொழில் முனைப்பு முன்னேற்ற பூங்கா, இளம் தொழில் முனைவோா்களை ஊக்குவிப்பதற்கான மிகப்பெரிய ஆய்வுக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் அ.பாமா புவனேஸ்வரி பேசியதாவது:

இந்திய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 60 சதவீதம் விவசாயத்தை நம்பியே உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. நபாா்டு வங்கி பலவகையான திட்டங்கள் மூலமாக கடன் உதவி வழங்கி வருகிறது. பெண் தொழில் முனைவோா்களுக்கென்றே 50 சதவீத மானியத்தில் தொழில் தொடங்க கடன் வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஜிடுஜி தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் உ.நடராஜநாதன், மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியா் ஜி.யோகானந்தன், உதவிப் பேராசிரியா் மு.சூா்யகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com