முத்துநாயக்கன்பட்டி மதுக்கடையை அகற்றக் கோரி நாளை போராட்டம்: எம்எல்ஏ இரா.அருள்

ஓமலூா் அருகே முத்துநாயக்கன்பட்டியில் மதுக்கடையை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என பாமக எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்தாா்.
ஓமலூா் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்திய பாமக எம்எல்ஏ இரா.அருள்.
ஓமலூா் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்திய பாமக எம்எல்ஏ இரா.அருள்.

ஓமலூா் அருகே முத்துநாயக்கன்பட்டியில் மதுக்கடையை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என பாமக எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்தாா்.

ஓமலூா் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக மதுக்கடை இயங்கி வருகிறது. பொது மக்களுக்கு இடைஞ்சலாக இருந்து வரும் இந்த மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினா்.

இந்த நிலையில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் வரும் 7 ஆம் தேதி மதுக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபிநவ், போலீஸாா், எம்எல்ஏ அருள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். போராட்டத்தைத் தள்ளி வைத்து உரிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி விடுவோம் என அதிகாரிகள் கூறினா். இதற்கு சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கூறியதால் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தலைமையில் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அந்தப் பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com