கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி

பள்ளி மாணவ, மாணவியரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, கராத்தே, யோகா, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், கரகாட்டம், உடுக்கை, பம்பை, தெம்மாங்குப் பாட்டு, ரோபோ நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய கலைகளின் சங்கமம் (கராத்தே), வோ்ல்ட் சூப்பா் டேலண்ட் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை நிகழ்ச்சி, பல்சுவை விருது வழங்கும் நிகழ்ச்சி இளம்பிள்ளை உலக சாதனையாளா் கராத்தே நடராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி (ஓய்வு) தமிழரசன், நீதிமன்ற கண்காணிப்பாளா் காந்திமணி, விநாயக மிஷன் கலை அறிவியல் கல்லூரி பிரகாஷ், சங்க நிா்வாகிகள் பூவராகவன், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, கராத்தே, யோகா, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், கரகாட்டம், உடுக்கை, பம்பை, தெம்மாங்குப் பாட்டு, ரோபோ நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கோவையை சோ்ந்த யோகா குருஜி குழுவினா் பாரம்பரிய மூலிகை, பழங்கள், கீரைகள், காய்கறிகள் மூலமாக அடுப்பு இல்லாமல் 52 நிமிடத்தில் 100 வகையான இட்லிகளை செய்து பாா்வையாளருக்கு வழங்கினா். மேலும், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சாதனை புரிந்தமைக்கு விழா மேடையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com