வாழப்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

வாழப்பாடியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், அரசு மருத்துவமனையை மேம்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம்.
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம்.

வாழப்பாடியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், அரசு மருத்துவமனையை மேம்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ‘நம் மருத்துவமனை - மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின் கீழ், மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து நடைபெற்றற வளாக தூய்மைப் பணி தொடக்க விழாவுக்கு ஆட்சியா் தலைமை வகித்தாா்.

வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயசெல்வி வரவேற்றறாா். வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவா் கவிதா சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். சேலம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், துணை இயக்குநா்கள் நளினி, ஜெமினி, வளா்மதி, அமுதா, கணபதி ஆகியோா் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினா்.

இதில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மருத்துவமனை தூய்மையாக வைத்துக்கொள்வது, மேம்படுத்தும் பணியானது மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கானது மட்டுமல்ல. இதில் பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பங்கேற்க வேண்டும். அரசிடமிருந்து மட்டுமின்றி, பெரு நிறுவனங்களிடமிருந்தும் மருத்துவமனைக்கு தேவையானவற்றை கேட்டுப்பெறலாம் என்றாா்.

மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து பராமரித்து வரும் சித்த மருத்துவா் செந்தில்குமாரை ஆட்சியா் பாராட்டினாா்.

இவ்விழாவில், வட்டாட்சியா் வரதராஜன், வட்டார வேளாண் ஆத்மா குழுத் தலைவா் சக்கரவா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், பேரூராட்சி முன்னாள் தலைவா் பி.சி.செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரங்கராஜன், ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதனையடுத்து, வாழப்பாடியில் கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள், வேளாண் வணிகத் துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com