பட்டியலின மக்களை புறக்கணிக்கும் வங்கிகள்: எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. பரபரப்பு பேச்சு

பட்டியலின மக்களுக்கு கடன் வழங்காமல் வங்கிகள் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் இது தொடர்ந்தால் வீதியில் இறங்கி போராட போவதாக சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார். 
பட்டியலின மக்களை புறக்கணிக்கும் வங்கிகள்: எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. பரபரப்பு பேச்சு

பட்டியலின மக்களுக்கு கடன் வழங்காமல் வங்கிகள் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் இது தொடர்ந்தால் வீதியில் இறங்கி போராட போவதாக சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்ட வங்கி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சேலம் தொங்கும் பூங்கா வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கு மேற்பட்ட வங்கி மேலாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இது பெரும்பாலும் வங்கிகளின் மூலம் நிதி வழங்கப்பட்டு தொழில்முனைவோர்கள் சுய தொழில் தொடங்குவார்கள். 

மேலும் கல்விக்காக கடன் வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். கல்விக்கடன் கேட்டு வங்கிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை  வெளியே அனுப்புவதாகவும், சுய தொழில் செய்யவும் மற்றும் தொழிலை மேம்படுத்தவும் பட்டியலின மக்கள் வங்கிக்கு சென்று கடன் கேட்டால் அவர்களை அலைகழிப்பதும், கடன் கொடுக்க மறுத்து புறக்கணிப்பதும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். 

வங்கியாளர்கள் சமூக சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்றும் பாரபட்சமின்றி அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி கடன் வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு வழி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் வங்கிகள் தொடர்ந்து கல்விக்கடன் கேட்டுச் செல்லும் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களையும் அலைகழிப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தான் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். 

வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கடுமையான எச்சரிக்கை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.

விடியோ இணைப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com