ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா் சங்கம் சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா் சங்கம் சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணை மூலம் பணியாளா்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தைவிட ரூ. 850 குறைவான ஊதியம் பெற வேண்டி உள்ளது.

எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் திருத்தப்பட்ட புதிய அரசாணையை வெளியிட வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிா்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தூய்மை காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் நிலையிலான பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை ஊராட்சி தலைவா் நியமனம் செய்வதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

நிா்வாகிகள் சிவசங்கா், தமிழ்செல்வன், மணிவேல், பழனிவேல், கோபால் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com