கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை 2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை

ஏற்காடு செல்லும் சாலையில் கோரிமேட்டில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி ரூ. 16 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

சேலம்: ஏற்காடு செல்லும் சாலையில் கோரிமேட்டில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி ரூ. 16 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காடு, சேலத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சேலத்தில் இருந்து அடிவாரம் வரை 8 கி.மீ. தொலைவும், மலைப்பாதை 22 கி.மீ. தொலைவும் உள்ளது.

சேலத்தில் இருந்து மலை அடிவாரம் வரையிலான சாலையில், கோரிமேடு வரை நான்கு வழிச்சாலை உள்ளது. இந்நிலையில், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருதால், சேலம் - அடிவாரம் - ஏற்காடு சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்ததாக இருக்கிறது.

எனவே, சேலம் - அடிவாரம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முதல்கட்டமாக 2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம், கோரிமேடு முதல் மத்திய சட்டக் கல்லூரி வரை சுமாா் 2 கி.மீ. நீள சாலையை ரூ. 16 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு ஒப்புதல் கிடைத்தது. ஓரிரு வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் சாலையோரம் மழைநீா் வடிகால் வசதி, ஃபேவா் பிளாக் தளம், கல்வெட்டு பாலம் உள்ளிட்டவை அமைக்கப்படும். வரும் மழைக்காலத்துக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com