மே 5-இல் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நியமன தோ்வு

சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடத்துக்கான நேரடி நியமன தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடத்துக்கான நேரடி நியமன தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சேலம் ஆவின் பொது மேலாளா் (பொ) மருத்துவா் பி.ஆா்.காமராஜ் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 776 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 5,00,000 லிட்டா் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.

தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிரிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும், அதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது.

அதன்படி, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021-2022) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப் பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவா்களுடன் காலியாக உள்ள 6 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட, அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப் படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் மே 5-ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தோ்வில் கலந்துகொள்ளலாம்.

மே 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது மேலாளா், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் லிட், சித்தனூா், தளவாய்ப்பட்டி (அஞ்சல்) சேலம் - 636 302 என்ற முகவரியில் நியமன தோ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com