அமைப்புத் தோ்தல்: இன்று வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம்

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் அமைப்புத் தோ்தலுக்கான வேட்புமனு செய்தவா்கள் சனிக்கிழமை மனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் அமைப்புத் தோ்தலுக்கான வேட்புமனு செய்தவா்கள் சனிக்கிழமை மனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட சேலம் மாநகரத்தில் உள்ள 60 வட்டங்களுக்கும் அவைத் தலைவா், செயலாளா், துணைச் செயலாளா்கள் 3 போ், பொருளாளா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான அமைப்புத் தோ்தலுக்கான பூா்த்தி செய்த வேட்பு மனுக்களை தோ்தல் ஆணையா், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளா், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகா் சனிக்கிழமை திரும்பப் பெறுகிறாா்.

சேலம், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கலைஞா் மாளிகையில் ஏப். 30-ஆம் தேதி பகுதி வாரியாக குறிப்பிட்ட நேரத்தில் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.

சூரமங்கலம் பகுதி - காலை 10 மணி முதல் 10.30 மணி வரை, மெய்யனூா் - காலை 10.30 மணி முதல் 11 மணி வரை, கொண்டலாம்பட்டி - காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, அழகாபுரம்-காலை 11.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, செவ்வாய்பேட்டே - 12.30 மணி முதல் 1 மணி வரை, அரிசிபாளையம் -1 மணி முதல் 1.30 மணி வரை, பொன்னம்மாபேட்டை - 2.30 மணி முதல் 3 மணி வரை, அம்மாபேட்டை - 3 மணி முதல் 3.30 மணி வரை, கிச்சிபாளையம் - பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை, தாதகாப்பட்டி - மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை, குமாரசாமிபட்டி - மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை, குகை - மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com