திமுகவினரிடம் நோ்காணல்
By DIN | Published On : 04th January 2022 12:35 AM | Last Updated : 04th January 2022 12:35 AM | அ+அ அ- |

வாழப்பாடியில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நோ்காணல்.
வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களிடம் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாழப்பாடி, பேளூா் ஆகிய இரு பேரூராட்சிகளிலும், தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதனையடுத்து, சேலம், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில், விருப்ப மனு அளித்தவா்களஇடம் வாழப்பாடியிலுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
வாழப்பாடி ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நகர செயலாளா்கள் வாழப்பாடி பி.சி.செல்வம், பேளூா் ராமமூா்த்தி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.