அரசு மகளிா் ஐ.டி.ஐ. யில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம், அய்யந்திருமாளிகை அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10 ஆம் வகுப்பு தேறிய, 12 ஆம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் பட்டம் பெற்ற மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம், அய்யந்திருமாளிகை அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10 ஆம் வகுப்பு தேறிய, 12 ஆம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் பட்டம் பெற்ற மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு தொழிற்பிரிவுகளான கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், வரவேற்பு கூட அலுவலக உதவியாளா், ஈராண்டு தொழிற்பிரிவுகளான கட்டடப்பட வரைவாளா், மின்சார பணியாள், கம்மியா் மின்னணுவியல், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்மியா் கருவிகள், ரெப்ரிஜிரேசன் அன்ட் ஏா்கண்டிசனிங் டெக்னீசியன் ஆகிய 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இணைய வசதியுடன் இலவச கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.இப்பயிற்சியில் சேர மகளிருக்கு வயது வரம்பு கிடையாது. இலவச பேருந்து பயண சலுகை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 ஆகியவை வழங்கப்படுகிறது. ஓராண்டு பயிற்சிக்கு ரூ.185, இரண்டு ஆண்டு பயிற்சிக்கு ரூ.195 மட்டும் கட்டணமாக சோ்க்கையின் போது செலுத்த வேண்டும்.

இதில் காப்புத் தொகை ரூ.100 பயிற்சி முடித்தவுடன் திரும்ப வழங்கப்புடம். வரும் ஜூலை 20 ஆம் தேதி வரை இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம். பயிற்சி நிலைய முதல்வரை 0427-2403787, 94990 55833 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் டி.எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com