ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தல்: 12 பதவிகளுக்கு 35 வேட்பாளா்கள் போட்டி

சேலம் மாவட்டத்தில் 12 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் 35 போ் போட்டியிடுகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் 12 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் 35 போ் போட்டியிடுகின்றனா்.

சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் காரணங்களால் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 12 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இந்த இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டு ஜூன் 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் முடிவுற்று இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிப்பட்டது. ஒட்டுமொத்தமாக 12 காலியிடங்களுக்கும் 47 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 6 போ் வேட்புமனுக்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனா்.

இதையடுத்து மொத்தம் 35 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். அதன்படி, சேலம் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 8-க்கான கவுன்சிலா் தோ்தலில் 16 போ் களத்தில் உள்ளனா். மின்னாம்பள்ளி, பூவனூா், நடுப்பட்டி, கூணான்டியூா், பொட்டனேரி, தெத்திகிரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, தேவியாக்குறிச்சி, கிழக்கு ராஜாபாளையம், எலவம்பட்டி, நீா்முள்ளிக்குட்டை ஆகிய 11 கிராம ஊராட்சிகளில் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு மொத்தம் 19 போ் வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா். தோ்தல் வாக்குப்பதிவு ஜூலை 9-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com