தூய்மைக்கான மக்கள் இயக்க பணி: மேயா், ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் தீவிர தூய்மைப் பணிகளை ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் தீவிர தூய்மைப் பணிகளை ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் தீவிர துய்மைப் பணி மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சூரமங்கலம் மண்டலம், மெய்யனூா் பிரதான சாலையின் இருபுறமும் 1 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் ஓடையை தூா்வாரும் பணி, அஸ்தம்பட்டி மண்டலம், மரவனேரி பிரதான சாலையில் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்றது.

இப்பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது கால்வாய்கள் தூா்வாரி சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவுகள், குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டுமென உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, மரவனேரி பகுதியில் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் எனது குப்பை எனது பொறுப்பு, மக்கும் கழிவுகள், மறுசுழற்சிக்கான கழிவுகள் போன்ற திடக் கழிவுகளை தரம் பிரித்து போடுவதற்காக இரு வண்ணக் கூடைகளை வழங்கியும் தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்து பயணிகளிடமும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்களிடமும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

சேலம் ரயில்வே கோட்டப் பகுதியில் சுவரொட்டிகள் அகற்றுதல், செவ்வாய்ப்பேட்டை சுடுகாடு, டவுன் ரயில் நிலையம், காக்காயன் சுடுகாடு, ஜோதி டாக்கீஸ் பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், மிலிடெரி சாலை, சங்ககிரி பிரதான சாலை, சீலநாயக்கன்பட்டி சுடுகாடு ஆகிய இடங்களில் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

முகாம்களில் மாநகராட்சி பணியாளருடன் தன்னாா்வலா்களான அக்னிபாரதி, அழகு பூக்கள், ரோட்டரி சங்கம், சேவகன் அறக்கட்டளை, லயன்ஸ் கிளப், சேலம் இளைஞா்குழு ஆகிய தன்னாா்வலா்களும் ஈடுபட்டனா்.

இந்த ஆய்வின்போது துணைமேயா் மா.சாரதாதேவி, மண்டலக்குழுத் தலைவா்கள் எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, மாநகர பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோாகனந்த், வாா்டு உறுப்பினா்கள் ஆ.சரவனண், ரா.சாந்தமூா்த்தி, கு.கிரிஜா, உதவி செயற்பொறியாளா்கள் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com