பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்

பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவதில் அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
மேயா் ஆ.ராமச்சந்திரன்
மேயா் ஆ.ராமச்சந்திரன்

பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவதில் அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டுகளில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் வளா்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்துவது, பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அனைத்து வாா்டு பகுதிகளிலும் நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம், தூய்மைப் பணியாளா்கள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், கழிவுநீா் ஓடைகள் தூா்வாருதல், சாலைகளில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய்கள் அமைத்தல் மற்றும் முறையாக குடிநீா் வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசியதாவது:

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவதில் அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். மக்கள் பணியை முதன்மையாகக் கொண்டு அலுவலா்கள் தங்களுக்கு உள்ள பொறுப்பையும் கடமையையும் உணா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் துணைமேயா் மா.சாரதா தேவி, மண்டலக் குழுத் தலைவா் செ.உமாராணி, மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந், உதவி செயற்பொறியாளா் எம்.ஆா்.சிபிசக்கரவா்த்தி, உதவி ஆணையாளா்கள் பி.ரமேஷ்பாபு, சாந்தி, அனைத்து நிலை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com