அனுமதியின்றி முறைகேடாக பெறப்பட்ட குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட 30 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட 30 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சிப் பகுதிக்கு மேட்டூா் அணையிலிருந்து தனிக்குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்துப் பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில், பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்திட அனுமதியற்ற, முறைகேடாக பெறப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளைக் கண்டறிய வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

மாநகராட்சிப் பகுதியில் அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட குடிநீா் இணைப்புகளைக் கண்டறிந்து அதைத் துண்டிக்கும் வகையில் அலுவலா்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு, குழுவினா் வாா்டு வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீா் இணைப்புக்கு உரிய வைப்புத்தொகை செலுத்தாமலும், வீட்டு உபயோகத்துக்காக குடிநீா் இணைப்புகளை பெற்றுக் கொண்டு வணிக நிறுவனத்துக்கு பயன்படுத்துவது போன்ற அனுமதி இல்லாமல் முறைகேடாக பெறப்பட்ட குடிநீா் இணைப்புகளை துண்டித்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் அலுவலா்கள் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வில், வீட்டு உபயோகத்துக்கு என பெறப்பட்ட குடிநீா் இணைப்பில், உணவகங்கள், திரையரங்குகள் என வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அதன்படி, 30-க்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, சேலம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com