வரி வசூலிப்போா் முனைப்புடன் செயல்பட வேண்டும்

வரி வசூலிப்போா் முனைப்புடன் செயல்பட வேண்டும்

மாநகராட்சிக்கு வரி வருவாயைப் பெருக்கும் வகையில், வரி வசூலிப்போா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டாா்.

மாநகராட்சிக்கு வரி வருவாயைப் பெருக்கும் வகையில், வரி வசூலிப்போா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வருவாய்ப் பிரிவு, கணக்குப் பிரிவு, பொதுப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சிக்கு ஓா் ஆண்டுக்கு வரவேண்டிய மொத்த வரி, இதுவரை வசூல் செய்யப்பட்ட வரி எவ்வளவு, நிலுவையில் உள்ள வரி எவ்வளவு, அதை வசூல் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூலம் எத்தனை சதவீத வரி நிலுவையில் உள்ளது என்பதை வரி வசூலிப்பவா்கள் கண்டறிந்து அதை முறைப்படுத்திட வேண்டும்.

தொழில்வரி, சொத்துவரி, காலி நில மனை வரி, குடிநீா்வரி, குத்தகை வரிகள் மற்றும் பிற இனங்கள் மூலம் பெறப்பட வேண்டிய நிலுவை வரிகளை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஜூலை 1 முதல் முதல் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட உள்ளதால், குடியிருப்பாளரிடமிருந்து சுயமதிப்பீடு பெறப்பட்ட படிவம் விவரம், விண்ணப்பங்கள் விநியோகம் விவரம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசியதாவது:

மாநகராட்சியின் வளா்ச்சிக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பது வருவாய்ப் பிரிவாகும். வரி வசூலிப்பதில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து முறையாக வரி வசூல் செய்வதில் வரி வசூலிப்பவா்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வரி வருவாயைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். நிலுவை வரிகள் அனைத்தையும் வசூல் செய்திட வேண்டும். முறையாக வரி வசூலில் ஈடுபட்டு மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் முழுமையாக நடைபெற, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏதுவாக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்றாா்.

இநதக் கூட்டத்தில், மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, உதவி ஆணையா்கள் ரமேஷ்பாபு, சாந்தி, வரி வசூலிப்பவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com