வீரக்கல் ஊராட்சி கூட்டத்தில் கிராம மக்கள் புகுந்து வாக்குவாதம்

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே ஊராட்சி கூட்டத்தில் புகுந்த பொதுமக்கள் குடிநீா் கேட்டு காரசார வாக்குவாதம் செய்தனா்.

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே ஊராட்சி கூட்டத்தில் புகுந்த பொதுமக்கள் குடிநீா் கேட்டு காரசார வாக்குவாதம் செய்தனா்.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வீரக்கல் ஊராட்சி. 9 வாா்டு உறுப்பினா்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் அதிமுகவைச் சோ்ந்த ஆா்.முனுசாமி ஊராட்சித் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறாா்.

திங்கள் கிழமை காலை ஊராட்சி மன்றக் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தலைவா் துணைத் தலைவா் மற்றும் 2 உறுப்பினா்கள் வந்திருந்த நிலையில் கூட்ட அறையில் அந்த கிராமத்தைச் சோ்ந்த தனபாலன், தம்பிதுரை மற்றும் சிலா் உள்ளே நுழைந்தனா். குடிநீா் கிராமத்திற்கு சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா் என்று தெரிவித்தநா்.தண்ணீா் வராதது குறித்து கேட்டால் டேங்க் ஆப்ரேட்டா் மரியாதை இன்றி பேசுவதாக ஆடியோவை அந்தக் கூட்டத்தில் போட்டு காண்பித்தனா். இதனால் ஊராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தலைவருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது 6ஆவது வாா்டைச் சோ்ந்த கவுன்சிலா் ஆசைத்தம்பி ‘போதிய உறுப்பினா்கள் இல்லாமல் கூட்ட தீா்மானங்கள் நிறைவேற்றக் கூடாது. ஊராட்சியில் நிறைய முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்’ எனக்கூறி கூட்ட அறையிலிருந்து வெளியேறினாா். நான்கு உறுப்பினா்கள் மட்டுமே இருந்த நிலையில் தொடா்ந்து ஊராட்சி மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாகவும் தலைவா் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com